அண்டை மாநிலங்களுடன் சண்டை போடுவதில் காலத்தை கழிக்காமல், தென்னக நீர்வழிச்சாலை திட்டத்திற்கான முயற்சியை, தமிழக அரசு எடுக்க வேண்டும்” என, மத்திய அரசின், நதிகள் இணைப்பு திட்ட நிபுணர் குழு உறுப்பினர் காமராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கர்நாடக அரசு, மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட முயற்சி எடுத்து வருகிறது. பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, ‘மேகதாது அணை கட்ட, தமிழக மக்கள் ஆட்சேபனை தெரிவிக்கக் கூடாது. தமிழக தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, கடல்நீரை குடிநீராக மாற்றிக்கொள்ளலாம்’ என, யோசனை கூறியுள்ளார். இது, மிகவும் வினோதமாக உள்ளது. கடல்நீரை குடிநீராக்க ஏராளமான மின்சாரம் தேவை. ஏற்கனவே, தமிழகத்தில் பல மணிநேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.
கர்நாடகாவில், குடிநீர் பிரச்னை மிக அதிகமான உள்ளது உண்மை தான். இதற்காக, பட்ஜெட்டில், 40 கோடி ரூபாயை கர்நாடகா ஒதுக்கியுள்ளது. கர்நாடகாவில் ஆண்டுதோறும், 2,000 டி.எம்.சி., தண்ணீர் கடலுக்கு சென்று வீணாகிறது. ஆனால், 200 டி.எம்.சி., தண்ணீருக்காக சண்டை போடுகிறோம். கர்நாடகாவில் வீணாகும், 2,000 டி.எம்.சி.,யை தேக்கினால், குடிநீர் மற்றும் மின்சார பிரச்னை தீரும். இதற்காக, கர்நாடக நீர்வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கர்நாடக அமைச்சர், கடந்த ஆண்டு என்னை அழைத்து, பலமுறை இதுகுறித்து பேசியுள்ளார். இத்திட்டத்தை ஏற்று செயல்பட தயாராக இருப்பதாக, உறுதி கொடுத்துள்ளார்.
கோதாவரியில் மட்டும் ஆண்டுதோறும், 3,000 டி.எம்.சி., தண்ணீர் கடலுக்கு சென்று வீணாகிறது. கடந்த ஆண்டு மட்டும், 5,000 டி.எம்.சி., கடலுக்கு சென்றுள்ளது. ஆனால், தென் மாநிலங்கள் தண்ணீருக்கு சண்டையிட்டு வருகின்றன. கோதாவரி ஆற்றில் வீணாகும் தண்ணீரை தேக்கினாலே, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்னை தீர்ந்துவிடும். இதற்காக, தென்னக நீர்வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக தமிழக அரசு உறுதியளித்து, நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் சண்டை போடுவதிலேயே காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறோம். முறையான முயற்சி எதுவும் எடுக்கவில்லை. இனியாவது, காலதாமதம் செய்யாமல் விரைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு, காமராஜ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment