கோவா நகரில் பிரபல ரெடிமேட் ஆடை கடை ஒன்றில், உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததாக மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெள்ளிக்கிழமையன்று புகார் அளித்ததையடுத்து, நாடு முழுவதும் இந்த விவகாரம் பேசப்பட்டு வருகிறது.
தான் ஒருபோதும் கடைகளில் உடைகளை முயற்சித்துப் பார்ப்பதில்லை என்கிறார் குஷ்பு.
இது குறித்து தமிழின் பிரபல நடிகையும் இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவிடம் கேட்டபோது, இம்மாதிரியான அச்சத்தின் காரணமாக, தான் ஒருபோதும் கடைகளில் இருக்கும் அறைகளில் உடைகளை முயற்சித்துப் பார்ப்பதில்லை என்று தெரிவித்தார்.ஆனால், பெரும்பாலானவர்கள் கடைகளிலேயே உடைகளை முயற்சித்துப் பார்க்கும் நிலையில், இம்மாதிரி ஒரு சம்பவம் வெளிவந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக குஷ்பு கூறினார்.
உடைகளை வாங்குபவர்கள், வீட்டிற்கு வந்து அணிந்து பார்த்து, சரியில்லையென்றால் திரும்பக் கொடுப்பதே பாதுகாப்பானதாக இருக்கும் என்கிறார் அவர்.அதற்குச் சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு, கடைகளிலேயே முயற்சித்துப் பார்ப்பதால்தான் இதுபோல நடக்கிறது என்கிறார் குஷ்பு.ஆனால், ஒரு பெண் கடைகளில் தவறான இடங்களில் இம்மாதிரி கேமராக்கள் இருப்பதாக நினைத்தால், உடனடியாக காவல்துறையை அணுக வேண்டும் என்கிறார் அவர். தான் அவமானப்படுத்தப்படுவோமோ என்று அஞ்சக்கூடாது என்கிறார் அவர்.
இம்மாதிரியான குற்றங்கள் தண்டிக்கப்படக்கூடியவையா, என்ன சட்டப்பிரிவு என்பதையெல்லாம் யோசிக்காமல் பெண்கள் நடந்தது அனைத்தையும் ஒரு காவல்நிலையத்தில் புகாராகப் பதிவுசெய்ய வேண்டும் என்கிறார் பிரபல வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்துவதற்கு உணவுக் கடைகள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் போன்ற இடங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று கோவா நகரக் காவல்துறை தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment