வங்கி கிளைகளில் பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை நாளை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பழைய கிழிந்த மற்றும் அழுக்கான ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்றி அவற்றுக்கு பதில் புதிய நோட்டுகள் மற்றும் நாணயங்கள் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 195 கிளைகளில் நாளை ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனடா வங்கி, உள்ளிட்ட பொதுத்துறை வங்கிக் கிளைகளில் பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். அதே போல் ஆக்சிஸ், கரூர் வைஸ்யா போன்ற தனியார் வங்கிகளின் கிளைகளிலும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
No comments:
Post a Comment