பிரமாண்ட ஏற்பாடுகள்
ஜி.கே.வாசன் தலைமையில் கட்சி பிறந்த பின்னர் நடந்த முதல் பொதுக்குழுக் கூட்டம் என்பதால் ஏற்பாடுகளும் பிரமாண்டமாக, பிரமாதமாக இருந்தன.
நிரம்பி வழிந்த அரங்கு
கூட்டம் நடந்த அரங்கில் எள்ளைப் போட்டால் எண்ணையாகி விடும் என்பது போல கூட்டம் ஆர்ப்பரிப்புடன் காணப்பட்டது. அரங்கமே நிரம்பி வழிந்தது.
பூவைப் பிய்த்துப் போட்ட மகளிர்
கூட்டத்தில் கலந்து கொண்ட மகளிர் அணியினர் பெரும் உற்சாகத்துடன் பூக்களைப் பிய்த்து தூக்கி் போட்டு வாசனை வாழ்த்தி போட்ட கோஷம் விண்ணை முட்டியது.
தலைவர் வாசன்
இக்கூட்டத்தில் கட்சியின் தலைவராக ஜி.கே.வாசன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஆளுயர மாலை அணிவித்து கட்சியினர் மகிழ்ந்தனர். அப்போதுதான் மகளிர் அணியினர் பெரிய மல்லிகைப் பூ மாலையைப் பிய்த்து பூக்களைத் தூவி வாழ்த்திக் கோஷமிட்டனர்.
தொண்டை நரம்பு புடைக்க
தொண்டை நரம்பு புடைக்க வாசனை வாழ்த்தி அவர்கள் போட்ட கோஷத்தால் அத்தனை ஆண்களும் சற்று அயர்ந்துதான் போனார்கள் என்றால் மிகையில்லை. இதே உற்சாகத்துடன் வரும் சட்டசபைத் தேர்தலுக்கும் இவர்கள் உற்சாகக் கூட்டணியை அமைப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment