Latest News

முதலுதவியின் போது கவனிக்க வேண்டியவை


விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக்கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிக் செல்லவேண்டும். ஒரு வேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்து கொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரோட்டீன்ஸ் மிக முக்கியம். புரோட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரோட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்லவேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன் பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு, எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக்கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்கவேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தப்படி நடப்பதற்கு வழி செய்யவேண்டும்.

கால் தடுமாறி பிசகிவிட்டால், உடனே கையால் நீவிவிடு என்பார்கள். அது தவறு. ஒரு வேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி, போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள். நாற்காலியும், செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா, நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா.. என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ரிலாக்ஸ் செய்து கொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகுப் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.