துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகர கோர்ட்டில் அரசு தரப்பு வக்கீலாக பணியாற்றிய மெஹ்மெட் சலிம் கிராஸ் என்பவரை கடந்த வாரம் கடத்திச் சென்ற தீவிரவாதிகள் அவரை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்றனர்.
இந்த காட்சிகளை சில அமைப்புகள் புகைப்படங்களாகவும், வீடியோ பதிவாகவும் சமூக வலைத்தளங்களின் மூலமாக வெளியிட்டன. மேற்கண்ட புகைப்படங்களை வெளியிட்ட 166 இணையதளங்களை முடக்கியுள்ள துருக்கி அரசு, டுவிட்டர், யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை தடை செய்யுமாறு அங்குள்ள இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment