Latest News

கிரெடிட் கார்டை’ தேர்வு செய்வது எப்படி?


கிரெடிட் கார்டு’ குறித்து பல எதிர்மறைக் கருத்துகள் இருந் தாலும், ஆத்திர அவசரத்துக்கு உத வும் அதன் சிறப்பு மறுக்க முடியா தது. சரியாகப் பயன்படுத்தி னால் தக்க பலன் கொடுக்கும் மந்திர அட்டைதான் அது.

எனவே, `கிரெடிட் கார்டு’ பெறத் தீர் மானிப்பவர்கள் கவனிக்க வேண் டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்…

ஆண்டுக் கட்டணம் கூடாது

நீங்கள் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம், நீங்கள் பெற நினைக்கும் கிரெடிட் கார்டுக்கு ஆண்டுக் கட்டணம் எதுவும் இருக் கக் கூடாது. ஆண்டுக் கட்டணம் இல்லாமல் பல நல்ல கிரெடிட் கார்டுகள் கிடைக்கின்றன. இந்நிலையில், ஆண்டுக் கட்டணத்து டன் கூடிய கார்டை தேர்வு செய்வதில் அர்த்தமில்லை.

ஆனால் சில கிரெடிட் கார்டுகளின் ஆண்டுக் கட்டணத்தை விட அவற்றின் அனு கூலங்கள் அதிகம் என்று யோசிப்பவர்கள் இருக்கிறார்கள். இருந்த போதும், நீங்கள் புதிதாக கிரெடிட் கார்டு பெறப்போகிறீர்கள் என்றால், ஆண்டுக் கட்டணம் இல்லாத தையே தேர்வு செய்வது நல் லது.

புதுப்பித்தல் கட்டணம் இல்லாதது

சில கிரெடிட் கார்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டு இறுதி யிலும், புதுப் பித்தல் கட்ட ணம் செலுத்த வேண்டும். ஆக இதுவும் `ஆண் டுக் கட்ட ணத்துடன்’ கூடிய கார்டுதான். எனவே இந்த கார்டை தேர்வு செய்யாமல் ஒதுக்கிவிடுவது நல்லது.

நிலுவைத் தொகையைச் செலுத்தும் வசதி

நீங்கள் உங்கள் வங்கியிலிருந்து கிரெடிட் கார்டு பெற்றால், அனே கமாக கார்டுக்கும், வங்கிக் கணக்குக்கும் இணைப்புப் பெற லாம். கார்டுக்கான நிலுவைத் தொகையை ஆன்லைன் மூலமாக செலு த்தலாம். இது பெரிய வசதி. ஆன்லைன் மூலமாக பணம் செலுத்த முடிகிறபோது, நீங்கள் ஊரில் இல்லாமல் போவது போன்ற வற்றால் தவணைத் தொகை யைச் செலுத்தத் தவறும் நிலை ஏற்படாது.

கிரெடிட் கார்டில் நிலுவை ஏதும் இல்லாமல் வைத்தி ருப்பது ஒரு நல்ல விஷயம். அதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். `பாலன்ஸ் ஜீரோ’வாக வைத்திருப்பது, தேவையற்ற கட்டணங் கள் குறித்த கவலையைக் குறைக்கும்.

செலவழிக்கும் விஷயம்

ஆண்டுக் கட்டணம் இல்லாத `கிரெடிட் கார்டில்’ நீங்கள் அடுத்துக் கவனிக்க வேண்டிய விஷயம், நீங்கள் எதற்கு அதிகமாகச் செலவழிக்கிறீர்களோ அத ற்கு, குறிப்பிட்ட கார்டு, `ரிவார்டு பாயி ண்டுகள்’ அளிக்கிறதா என்பது.

உதாரணத்துக்கு நீங்கள் உங்கள் சொந்த ஊரை விட்டு வெளி யூரில் வேலை செய் கிறீர்கள். ஆண்டுக்கு மூன்று முறை சொந் த ஊருக்குச் சென்று வருகிறீர்கள், அதற் கான பயணக் கட்டணத் தைச் செலுத்த கிரெடிட் கார்டை பயன் படுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் நல்ல `ரிவார்டு பாயிண் டுகள்’ அளிக்கும் கிரெடிட் கார்டை பரிசீ லிக்கலாம். மாறாக, நீங்கள் சொந்த கார் வைத்திருக்கி றíர்கள், அதிலேயே ஊருக்குச் சென்று வருவீர்கள் என்றால், பெட்ரோல் போடும்போது `ரிவார்டு பாயி ண்டுகள்’ அளிக்கும் கிரெடிட் கார்டு உங்களுக்கு நல்லது.

வெவ்வேறு கார்டுகள் அளிக்கும் பல்வேறு வகையான சலுகை களை அலசிப் பார்த்து, உங்களுக்கு எது பொருந்துமோ, எது அதிகப் பயனளிக்குமோ அதைத் தேர்வு செய்யுங்கள்.

வட்டியைத் தவிர்க்க வேண்டும்

கிரெடிட் கார்டுக்கான வட்டி செலுத்து வதை கூடியமட்டும் தவிர் க்க வேண் டும். காரணம் அது மிகவும் அதிகமாக இருக்கும்.

எனவே, தவிர்க்க முடியாத நிலை யிலேயே வட்டியைச் செலுத்த வேண் டும். இது மோசமான நிலுவை, மிகச் சீக்கிரமாக பூதா கரமாக வளரக்கூடியது என்பதால் இந்நிலை யை அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதிகமான வட்டி விகிதம் விதிக்கக்கூடிய கார்டுக்கு பதில் குறை வான வட்டி விகிதம் விதிக்கக்கூடிய கார்டை தேர்வு செய்வது நல்லது என்றால், `பாலன்ஸ் ஜீரோ’ நிலையைப் பராமரிப்பது இன்னும் நல்லது.

கடைசியாக, கிரெடிட் கார்டை தேர்வு செய்வதில் எந்த அறி வியல் சூத் திரமும் இல்லை. கார்டுகளின் பல்வே றுவித `சாய்ஸ் கள்’, சலுகைகளைப் பார்த்து, உங்களுக்கு ஏற்ற தைப் பெறலாம். நாங்கள் இரண்டு வார காலம் வழங்கிய யோசனைகள், கிரெடிட் கார்டு குறித்து ஒரு பொதுவான `ஐடியா’ வை உங்களுக்கு வழங் கியிருக்கும் என்று நம்புகிறோம்.

அடிப்படையான விஷயம் ஒன்றுதான்- கிரெடிட் கார்டை பர்சில் வைத்துச் செலவழிக்காமல், வீட்டில் வைத்து, அத்தியா வசியத் துக்கு மட்டும் செலவழிப்பது!

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.