ஒரே வீட்டில் வசிக்கும் குடும்பங்கள் தனி தனியாக சமையல் அறை வைத்து இருந்தால் தனி தனி ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதம் எழுப்பி பேசினார்.அதில் கலந்துகொண்டு பேசிய குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் பேசும்போது, `ஒரே கூரையின் கீழ் பல குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்கள் ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும்போது, ஒரு வீட்டுக்கு ஒரு ரேஷன் அட்டைதான் வழங்கமுடியும் என்று அதிகாரிகள் கூறி விடுகின்றனர். அவர்களுக்கும் ரேஷன் அட்டை தரப்படவேண்டும்` என்றார்.
அதற்கு அமைச்சர் காமராஜ் பதிலளித்துப் பேசுகையில்,
“தமிழகத்தில் 11 லட்சம் புதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 3.58 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டன. தற்போது மாநிலத்தில் 1.97 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன. புதிய அட்டைகள் பெறத்தகுதி இருந்தால், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் 60 நாட்களுக்குள் ரேஷன் அட்டை தரப்படுகிறது. ஒரே வீட்டில் வசித்தாலும், தனித்தனியாகச் சமையல் அறை வைத்திருந்தால், தனிக் குடும்பத்துக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படும்” என்றார்.
No comments:
Post a Comment