உக்ரைனுக்கு அப்கிரேடு செய்வதற்காக அனுப்பப்பட்ட இந்தியாவின் ஐந்து AN-32 ரக போர் விமானங்கள் மாயமாகிவிட்டதாக ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு வைத்திருக்கிறது. கடந்த 2009-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி உக்ரைனின் கீவ் மாகாணத்தை சேர்ந்த ஆண்டோநாவ் பிளாண்ட்டுக்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான 40 AN-32 ரக போர் விமானங்கள் அப்கிரேடு செய்வதற்காக அனுப்பட்டது. இதன் கடைசி லாட்டாக 5 போர் விமானங்கள் அனுப்பட்டது. ஆனால், நீண்ட காலமாகியும் விமானம் அப்கிரேடு செய்யப்பட்டு திரும்பாததால் மாயமாகிவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அண்மையில், இந்திய பாதுகாப்புதுறை மந்திரி மனோகர் பரிக்கர் கூறும்போது, உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் தற்போது பிரச்சனை நிலவி வருவதால், அங்கு ஸ்பேர் பார்ட்ஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால்தான், அந்த 5 விமானங்களையும் அப்கிரேடு செய்யும் வேலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment