மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடாது என்ற நிபந்தனையின்பேரில், லஞ்சமாக அளிக்கப்பட்ட பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு கிராம மக்கள் அனுப்பியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த களத்தூர் பாலாற்றில் மணல் குவாரி அமைக்கப்படும் என மாவட்ட நிர்வாக தரப்பில் தகவல் அளித்த நிலையில், களத்தூர் கிராம மக்கள் மணல் குவாரி அமைக்க கூடாது என வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் இரவில் அடையாளம் தெரியாத நபர்கள் வீடு வீடாக சென்று மிரட்டி பணத்தை அளித்துள்ளனர். மிரட்டலால் பயந்து போன கிராம மக்கள் பணத்தை ஒன்று திரட்டி மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க முடிவு செய்தனர்.
ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் மணல் குவாரி தரப்பினர் அளித்த ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 970 ரூபாயைக் ஐந்தாக பிரித்து வங்கியில் வரைவு காசோலையாக மாற்றி தமிழக முதல்வரின் பொது நிவராண நிதிக்கு விரைவு தபாலில் அனுப்பி வைத்தனர்.
இத்துடன் ஒரு மனுவும் அளிக்கப்பட்டது. அதில், மிரட்டலுக்கு பயந்து பணத்தை பெற்று கொண்டதாகவும், தற்போது பணத்தை முதல்வர் பொது நிவராண நிதிக்கு அனுப்பி வைப்பதாகவும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment