சண்டிகர் - ஹரியானாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் புகுந்து ஹிந்து தீவிரவாதிகள் ஹனுமன் சிலையை வைத்து அட்டூழியம் செய்துள்ளனர்.
ஹரியானாவில் உள்ள கைம்ரி என்ற கிராமத்தில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கு புகுந்த ஒரு ஹிந்து தீவிரவாதக் கும்பல் அந்த தேவாலயத்தில் உள்ள சிலுவையை உடைத்து விட்டு அந்த இடத்தில் ஹனுமான் சிலையை வைத்துள்ளது. இது சம்பந்தமாக பாதிரியார் சுபாஷ் சந்த் 14 நபர்கள் மீது குற்றம் சுமத்தி வழக்கு தொடர்ந்துள்ளார்.
காவல்துறையினர் இந்தக் கும்பல் மீது குற்றவியல் பிரிவு 147 (கலவரம் ஏற்படுத்துதல்), 153A (குழுக்களுக்கிடையில் வெறுப்புணர்வைத் தூண்டுதல்), 295 (மத வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்தல்), 380 (திருட்டு) மற்றும் 506 (அத்து மீறி நுழைதல்) ஆகியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாதிரியாரை கொலை செய்யப் போவதாகவும் அந்தத் தீவிரவாதக் கும்பல் மிரட்டியுள்ளது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ஹிஸார் மாகாண டிஐஜி சௌரப் சிங் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment