அலுவலகத்தில் நீண்டநேரம் உட்கார்ந்துகொண்டு வேலைசெய்பவர்களுக்கு பல் வேறு உடல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படுகின்றன என இங்கிலாந்தை சேர்ந்த ’ஆன் யுவர் பீட் பிரிட்டன்’ என்ற நிறுவனம் நடத்திய் ஆய்வில் தெரியவந்து உள்ளது.இந்த நிறுவனம் கெட் பிரிட்டன் ஸ்டேண்டிங்- தி பிரிட்டீஷ் ஹார்ட் பவுண்டேசன் ஆகியவைகளுடன் 2000 அலுவலக பணியாளர்களிடம் இந்த் ஆய்வை நடத்தி உள்ளது.
அந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளதாவது:-
இந்த 45 வீதமான பெண்களும் 37 வீதமான ஆண்களும் 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே வேலைத்தளத்தில் நிற்கின்றனர்.அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் தங்களின் அலுவலக மேசையிலேயே பகலுணவை முடித்துக்கொள்கின்றனர். 78 வீதமானவர்கள் நாற்காலியில் அமர்ந்துகொண்டே நாளைக் கடத்துவதாக நினைக்கின்றனர்.
கைகால்களை அசைக்காமல் சும்மா இருப்பது உடல் இது ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய சவாலானது.இதயநோய், நீரிழிவுநோய், புற்றுநோய்கள்,மனநலம் பாதிக்கப்படுதல் இப்படி பல பிரச்சனைகளுக்கு உட்கார்ந்துகொண்டே வேலைபார்ப்பது காரணமாவதாக ஏற்படுகிறது.வேலைத்தளத்தில் அமர்ந்துகொண்டே இருப்பதால் உடலுக்கு தீங்குதான் என்று மூன்றிலிரண்டு பேருக்கு தெரிந்தே இருக்கின்றது..
நாங்கள் தினசரி சைக்கிளில் தான் வேலைக்கு வருகிறேன், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறேன் என்று கூறுபவர்களைக் கூட நீண்டநேரம் ஆசனத்தில் அமர்ந்துகொண்டே வேலைபார்ப்பது பாதிக்கின்றது. தொடர்ச்சியாக உட்கார்ந்தே இருப்பதால், நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து சத்துக்களை உடலில் சேர்ப்பதற்கான கட்டமைப்பில் தாமதம் ஏற்படுகின்றது. அதனால் சர்க்கரையின் அளவுகளையும் ரத்த அழுத்தத்தையும் கொழுப்புச் சத்து துண்டுகளாக்கப்படுவதையும் உடல் கட்டுப்படுத்தும் முறையில் பாதிப்பு ஏற்படுகிறது.
அடிக்கடி எழுந்து நிற்குமாறும் அதிகம் நடக்குமாறும் அலுவலகத்தில் நின்றுகொண்டே கூட்டங்களை நடத்துவது அல்லது நின்றுகொண்டு வேலைபார்க்கக்கூடிய மேசைகளை வைத்திருப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம் என்றும் அந்த அமைப்பு கூறுகின்றது.
லிப்டுக்குப் பதிலாக படிகளில் நடந்துசெல்வது, நாற்காலியிலிருந்து எழுந்துசென்று பகலுணவை உண்பது, ஒவ்வொரு 30 நிமிடமும் கணினி வேலையிலிருந்து சிறிது ஓய்வு எடுப்பது, தொலைபேசியிலோ மின்னஞ்சலிலோ பேசிக்கொள்ளாமல் எழுந்துசென்று சக பணியாளர்களுடன் உரையாடுவது போன்ற சிறிசிறு மாற்றங்களின் மூலம் தொடர்ச்சியாக உட்கார்ந்து இருப்பதை தவிர்க்க முடியும்.அமர்ந்துகொண்டே இருப்பதிலும் பார்க்க எழுந்து நிற்பதன் மூலம் மணிக்கு 50 கலோரிகளை மேலதிகமாக எரிக்கமுடியும் என்று கெட் பிரிட்டன் ஸ்டேண்டிங் அமைப்பை சேர்ந்த கவின் பிராட்லி கூறி உள்ளார்.
No comments:
Post a Comment