Latest News

கார்ட்டூன்கள் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகள்!


கார்ட்டூன்களை ரசிப்பது ஒரு வகையில் பயனுள்ள பொழுதுபோக்காக இருந்தாலும், கார்ட்டூன் மீதான மோகத்திற்கு அடிமையாக மாறும்போது கதை வேறாகிறது. கார்ட்டூன்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். கார்ட்டூன்கள் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத பாகமாக மாறி வருகின்றன. குழந்தைகளை உணவு உண்ண வைப்பதற்காகவும் , தங்களுக்கு ஓய்வு வேண்டும் என்பதற்காகவும், தங்களின் வேலைகளில் தொந்தரவின்றி ஈடுபடவும், குழந்தைகளை கார்ட்டூன் திரைகளின் முன் விட்டுச் செல்லும் பல பெற்றோர்கள் இங்கு உள்ளனர்.

நீங்கள் அத்தகைய பெற்றோர்களில் ஒருவராக இருந்தால், குழந்தைகைளின் வளர்ச்சியில் கார்ட்டூன்கள் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது. தினமும் கார்ட்டூன் பார்ப்பது குழந்தைகளை இப்பழக்கத்திற்கு அடிமை ஆக்குகிறது. இது அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சியை பாதிக்கிறது.

கார்ட்டூன்கள் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாவது குழந்தைகளின் கற்பனைத் திறனை பாதிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்கள் உண்மையான உலகத்தினின்றும் , அனுபவங்களினின்றும் விலக்கி வைக்கப்படுகின்றனர். படுக்கையில் இருந்து கார்ட்டூன் பார்ப்பதை விட வெளியில் சென்று விளையாடுவதில் பல நன்மைகள் உள்ளன. கார்ட்டூன்கள் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றி இன்று விவாதிக்கலாம்.

மொழிவளர்ச்சி குறைபாடு பெரும்பாலான கார்ட்டூன்கள் சரியான சொல்லகராதியை உபயோகிப்பதில்லை. இது உங்கள் குழந்தைகளையும் தவறான மொழி ஆளுமையை பின்பற்ற செய்கிறது. குழந்தைகள் சாதாரணமாக பேசுவதை விட்டு தங்களுக்கு விருப்பமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல பேச முயற்சிக்கின்றன.இது கார்ட்டூன்கள் குழந்தைகளை பாதிக்கும் விதங்களில் ஒன்றாகும்.

பார்வைக் குறைபாடுகள் தொடர்ச்சியாக கணினி மற்றும் டேப்லெட்களின் பிரகாசமான ஒளிக்கு ஆட்படுவது உங்கள் செல்லக் குழந்தைகளின் கண்களுக்கு ஏற்றதில்லை.இத்திரைகளின் மும் கணிசமான நேரத்தை செலவிடுவது நாளாவட்டத்தில் உங்கள் குழந்தையின் கண் பார்வையை பாதிக்கும்.

குறைவான உடல் உழைப்பு கார்ட்டூன்களுக்கு அடிமையாவது குழந்தைகளை அதிக நேரம் வீட்டினுள்ளே இருக்க வைக்கிறது . வெளியே விளையாடுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை அவர்கள் உணர்வதில்லை. வெளியே விளையாடுவது அவர்களுக்கு இயற்கையை தெரிந்து கொள்ள உதவுவதோடு அவர்களை துடிப்போடு இருக்க வைக்கிறது.

மனவியல் குறைபாடுகள் கார்ட்டூன்கள் முன் அதிக நேரம் செலவழிப்பது குழந்தைகளின் தனிமை மனப்பான்மைக்கும் , அலட்சிய மனப்பான்மைக்கும் மூல காரணங்களில் ஒன்றாகும். இதனால் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இருப்பதில்லை. இது அவர்களின் சமூக நடத்தையையும் பாதிக்கிறது.

தவறான உணவு முறை கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையான குழந்தைகள் திரைக்கு முன் அமர்ந்து சாப்பிடவே முற்படுவர். இதுவே குழந்தைகளின் தவறான மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறைக்கு மூல காரணமாகும். குழந்தைப் பருவத்தில் ஒருவர் பழகும் உணவு முறையே இறுதி வரை நிலைத்திருக்கும்.

பாதிக்கப்படும் சமூக வாழ்க்கை கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையாவது குழந்தைகளின் சமூக வாழ்வை பாதிக்கிறது . பிற சமவயது குழந்தைகளுடன் விளையாடுவதில் அவர்களுக்கு ஈடுபாடு இருப்பதில்லை. இது அவர்களை சமூக வாழ்வினின்றும் தனித்திருக்க செய்கிறது. சமூகத்தோடு ஒன்றி இருக்கப் பழகாவிடில் குழந்தைகள் எதிர்காலத்தில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம்.

வன்முறை குழந்தைகள் பலவிதங்களில் பெற்றோரை விட மேம்பட்டவர்களாக இருக்கின்றனர். நாம் ஒரு காலத்தில் டாம் அன் ஜெர்ரி கார்ட்டூன் பார்ப்பதை விரும்பினோம். ஆனால் நமது குழந்தைகள் வன்முறை சார்ந்த கார்ட்டூன் மற்றும் வீடியோ கேம்களை விரும்புகின்றனர். இது கார்ட்டூன் குழந்தைகள் மீது ஏற்படுத்தும் தீவிரமான விளைவுகளில் ஒன்றாகும். குழந்தைகள் தாமாக எந்த பழக்கத்தையும் வளர்த்துக் கொள்வதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் என்ன சொல்லிக் கொடுக்கிறீர்கள் , என்ன செய்கிறீர்கள் என்பதில் இருந்தே குழந்தைகளின் பழக்கங்கள் உருவாகின்றன. கார்ட்டூன் குழந்தையை எவ்வாறு பாதிக்கும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். குசந்தைகள் கார்ட்டூன் பார்க்கும் நேரத்தை புத்திசாலிதனமாக முறைப்படுத்துவதோடு அவர்களை வெளியே விளையாடவும் பழக்கப்படுத்துங்கள்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.