Latest News

அதிரையில் இஸ்லாத்தை ஏற்ற பட்டதாரி குடும்பம் - நமக்கு ஒரு பாடம்

9:100   وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ
9:100. (இஸ்லாத்தின் அழைப்புக்கு) முதன் முதலில் பதிலளித்த முஹாஜிர்கள்அன்ஸாரிகளைக் குறித்தும்அவர்களை யார் நேர்மையோடு பின்பற்றினார்களோ அவர்களைக் குறித்தும் அல்லாஹ் திருப்தி கொண்டான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தி அடைந்தார்கள். கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனத் தோப்புகளை அல்லாஹ் அவர்களுக்காகத் தயார் செய்துவைத்திருக்கின்றான்அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்.

அதிரை CMP லேனில் இயங்கும் ALM பள்ளிக்கூட ஜூம்ஆ மஸ்ஜிதில் நேற்று நடைபெற்ற ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து கும்பகோணத்தை சேர்ந்த பட்டதாரி குடும்பத்தினர் நால்வர் அதிரை தாருத் தவ்ஹீத் சகோதரர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தங்களது வாழ்வியலாக ஏற்றனர், எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

மௌலவி. அப்துல் ரஹ்மான் அவர்கள் ஒரிறைக் கலிமாவை சொல்லிக் கொடுத்ததை தொடர்ந்து,

சகோதரர் விஜயராகவன்  BBA  (குடும்பத் தலைவர்) - உமர் ஆகவும்
சகோதரி லக்ஷ்மி    (குடும்பத் தலைவி) -    வாஹிதா ஆகவும்
சகோதரர் சாய் கிருஷ்ணா (மகன்) – ஸையான் அகமது எனவும்
சகோதரர் விஷ்ணுவர்தன்    (மகன்) - சமி அகமது எனவும்
 
பெயர்களை மாற்றிக் கொண்டு அன்று பிறந்த பாலகர்கள் எனும் சிறப்புடன் முஸ்லீம்களாயினர்.
 
இது அன்றாடம் உலகில் ஏராளமான மக்களின் உள்ளங்களை ஈர்த்து வரும் செய்திகளில் ஒன்று தான் ஆனால் பரம்பரை முஸ்லீம் என மார்தட்டிக் கொண்டுள்ள நாம் அழைப்புப் பணியில் என்ன செய்தோம் என்பதே கேள்வி! ஆனால் மிகச்சில வருடங்களுக்கு முன்மாரிமுத்தாக இருந்து இஸ்லாத்தை ஏற்றவரும், தாருத் தவ்ஹீதின் தீவிர ஆதரவாளருமான சகோதரர் யஹ்யா அவர்களின் அழைப்புப்பணியின் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஒரிறைக் கொள்கையை எத்திவைக்க முடிகிறபோது கோளாறு யாரிடம் என நாம் ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்திட கடமைப்பட்டுள்ளோம்.

6:90   أُولَٰئِكَ الَّذِينَ هَدَى اللَّهُ  ۖ فَبِهُدَاهُمُ اقْتَدِهْ ۗ قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا  ۖ إِنْ هُوَ إِلَّا ذِكْرَىٰ لِلْعَالَمِينَ
6:90. (நபியே!) அவர்கள்தாம் அல்லாஹ்வினால் நேர்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களுடைய வழியினையே பின்பற்றிச் செல்வீராக! நான் இந்த (அழைப்புப்) பணிக்காக எந்தவிதக் கூலியையும் உங்களிடம் கோரவில்லை” என்று கூறுவீராக! இது அகிலத்தார் அனைவர்க்கும் உரிய ஓர் அறிவுரையே ஆகும்.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது அவர்களிடம், 'நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். எனவே,அவர்களுக்கு முதலாவதாக, அல்லாஹ் ஒருவன் எனும் (ஏகஇறைக்) கொள்கையை ஏற்கும்படி அழைப்புக் கொடுங்கள். அதை அவர்கள் புரிந்து (ஏற்றுக்) கொண்டால், தினந்தோறும் ஐந்து நேரத் தொழுகைகளை அவர்களின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அவர்கள் (அதை ஏற்று) தொழவும் செய்தால் அவர்களிடையேயுள்ள செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களிடையேயுள்ள ஏழைகளுக்குச் செலுத்தப்படுகிற ஸகாத்தை அவர்களின் செல்வங்களில் அல்லாஹ்கடமையாக்கியுள்ளான் என்று அவர்களிடம் தெரிவியுங்கள். அதையும் அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களிடமிருந்து (ஸகாத்தை) வசூலித்துக் கொள்ளுங்கள். (ஆனால்,) மக்களின் செல்வங்களில் சிறந்தவற்றைத் தவிர்த்திடுங்கள்' என்றார்கள்.புஹாரி: 7372.



அதிரையிலிருந்து
முகமது (SIS) உதவியுடன்
நிஜாம் மற்றும் ஹாஜா
 



படங்கள் உதவி: அதிரை நியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.