வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்திற்கு அருகே உள்ள களத்தூர் என்ற கிராமத்தில் பாலாற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் மணல் அள்ளுபவர்கள், தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க அந்த கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்களிடம் தலா 10 ஆயிரம், 15ஆயிரம் என லஞ்சமாக கொடுத்துள்ளனர். இது தெரிந்த கிராம மக்கள், லஞ்ச பணம் வாங்கியவர்களை தேடி கண்டுபிடித்தனர். அவர்கள் யாரும் ஊருக்குள் வரக்கூடாது என்று அறிவித்தனர். இதனால் பயந்துபோன அந்த நபர்கள் மணல் கொள்ளையர்கள் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கிறோம் என்று கிராம மக்களிடம் சரண் அடைந்தனர். அதன்படி மணல் கொள்ளையர்கள் கொடுத்த லஞ்சப்பணம் னீ2 லட்சத்து 18 ஆயிரத்தை கிராம மக்களிடமே திருப்பிக்கொடுத்தனர்.
பணத்தை பெற்றுக்கொண்ட கிராம மக்கள் வேலூர் கலெக்டரிடம் அதை கொடுப்பதற்காக நேற்று பகல் 12 மணியளவில் 150க்கும் மேற்பட்டோர் தனியாக பஸ் வாடகைக்கு எடுத்து வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு புறப்பட்டனர். அவர்களை போலீசார் வழிமறித்து தடுத்தனர். இதனால் கிராம மக்களில் சிலர் பைக்குகளில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். னீ2 லட்சத்து 18 ஆயிரத்தையும் கையோடு கொண்டு வந்தனர். டிஆர்ஓ மணிவண்ணனிடம் சென்று, மணல் கொள்ளையர்கள் கொடுத்த பணத்தை கொடுத்தனர். அவர் அதை வாங்க மறுத்துவிட்டார். நான் இந்த பணத்தை வாங்க முடியாது நீங்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கொடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். பணத்தை வாங்க அதிகாரிகள் மறுத்ததால் கிராம மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
No comments:
Post a Comment