மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கியதில் 100 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்று உள்ளதாக மீனவர் மக்கள் முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பேட்டியளித்த மீனவர் மக்கள் முன்னணி அமைப்பினர் மானிய விலையில் டீசல் வழங்கியதில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். மீன்வளத்துறையின் அமைச்சரின் உதவியாளர் மற்றும் உயர் அதிகாரிகள் துணையோடு முறைகேடு நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
கேஸ் சிலிண்டருக்கான மானியத்தை வங்கிகளில் செலுத்துவது போல மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியத்தையும் வங்கி கணக்குகளில் செலுத்த வேண்டும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். மற்ற மாநிலங்களை போல விசைப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசலின் அளவை 5000 ஆயிரம் லிட்டராக உயர்த்த வேண்டும் என்று மீனவர் மக்கள் முன்னணியினர் கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment