தமிழகத்தில் உள்ள 8 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கோயம்புத்தூர்-ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே இரு மார்க்கமாக இயக்கப்படும் கொங்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்.12647/12648) கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளது. இந்த சேவை வருகிற 22-ந் தேதி செயல்பட உள்ளது. திருச்சி-ஹவுரா இடையே இயக்கப்படும் திருச்சி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் (12664/12663) கூடுதலாக ஒரு மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த சேவை திருச்சியிலிருந்து நாளை முதலும், ஹவுராவிலிருந்து வருகிற 22-ந்தேதி அமல்படுத்த உள்ளது.
கோயம்புத்தூர்-சென்னை சென்டிரல் இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (12682/12681) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளது. இந்த சேவை கோயம்புத்தூரிலிருந்து நாளை முதலும் சென்னை சென்டிரலிருந்து வருகிற 21-ந்தேதியும் செயல்பட உள்ளது. சென்னை சென்டிரல்-நாகர்கோவில் இடையே இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (12682/12681) கூடுதலாக 2 படுக்கை வசதி பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட இருக்கிறது. இந்த சேவை கோயம்புத்தூரிலிருந்து நாளை முதலும், சென்னை சென்டிரலிருந்து வருகிற 21-ந்தேதியும் செயல்பட உள்ளது.
சென்னை சென்டிரல்-ஜம்மு தாவி இடையே இரு மார்க்கமாகவும் (வாரம் மூன்று முறை) இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (16031/16032) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த சேவை சென்னை சென்டிரலிருந்து நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. ஜம்முதாவியிலிருந்து நாளை முதல் செயல்பட இருக்கிறது. சென்னை சென்டிரல்-லக்னோ இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும் வார இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் (16093/16094) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த சேவை சென்னையில் 21-ந்தேதியும், லக்னோவிலிருந்து 23-ந்தேதியும் செயல்பட இருக்கிறது.
ராமேசுவரம்-குஜராத் மாநிலம் ஒகா இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (16733/16094) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இந்த சேவை ராமேசுவரத்திலிருந்து நாளை முதலும், ஒகாவிலிருந்து வருகிற 24-ந்தேதியும் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. சென்னை சென்ட்ரல்-பழனி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (22651/22652) கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. இந்த சேவை சென்னையில் நேற்று தொடங்கப்பட்டது. பழனியில் இருந்து இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment