பிரான்ஸில் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட 5 பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் உள்ள போர்டாக்ஸ் பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் வியாழக்கிழமை வீட்டில் உள்ள குளிர்பானங்கள் வைக்கு குட்டி ப்ரீசரை திறந்துள்ளார். அதில் ஒரு பையில் பிறந்த குழந்தையின் உடல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்த உடன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். வீட்டை சோதனையிட்டபோது அங்கு பெரிய ப்ரீசரில் மேலும் 4 பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த சோதனை நடந்தபோது வீட்டில் புகார் அளித்த அந்த 40 வயது நபர், அவரின் 35 வயது மனைவி, 13 மற்றும் 15 வயது மகள்கள் ஆகியோர் இருந்தனர்.
இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் அந்த 35 வயது பெண்ணை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் கடந்த செவ்வாய்க்கிழமை குழந்தை ஒன்றை பெற்று அதன் உடலை ப்ரீசரில் வைத்துள்ளார். தனது மனைவியின் 5 கர்ப்பங்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கணவர் பரிதாபமாக தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2010ம் ஆண்டு வடக்கு பிரான்சில் உள்ள வீட்டு தோட்டத்தில் 8 பச்சிளம் குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்ககது.
No comments:
Post a Comment