சூரியன் மற்றும் சந்திரனுக்கு மத்தியில் பூமிப்பந்து நகர்ந்து வரும் வேளையில் சூரியன் மற்றும் சந்திரனின் மீது பூமியின் நிழல் படிந்து, அவற்றின் ஒளிக்கதிர்கள் பூமியின் மீது விழாமல் மறைக்கப்படும் நிகழ்வு சூரிய கிரகணம் என்றும் சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகின்றது.
சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைக்கும் வேளையில் அந்த நிகழ்வு முழு சந்திர கிரகணம் எனப்படுகின்றது. இத்தகைய முழு சந்திர கிரகணம் வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி நிகழவுள்ளது.
சந்திரனின் நுனிப்பகுதியை பூமி மறைக்கும் நிகழ்வு அன்று மாலை 3 மணி 47 நிமிடங்களுக்கு தொடங்கும். எனினும், அவ்வேளையில் சூரியன் மேற்கே மறைந்து, கிழக்கே சந்திரனின் உதயம் தோன்ற வாய்ப்பில்லை என்பதால் மாலை 5.30 மணியளவில் சந்திரனை முழுமையாக கிரகணம் (பூமியின் நிழல்) மறைத்த பின்னர், 5 மணி 32 நிமிடங்களில் இருந்து கிரகணம் மெல்ல, மெல்ல விலகும் காட்சி இந்தியா முழுவதும் தெளிவாக காண முடியும்.
எனினும், அன்று மாலை 6.32 மணிக்கு மேற்கு திசையில் சூரியன் மறைவதால், இதே நேரத்தில்தான் கிழக்கில் சந்திரன் உதிக்கும். எனவே, கிரகணம் விலகும் காட்சியை மட்டுமே மக்கள் தெளிவாக காண முடியும் என்பது, குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment