தீவிரவாதத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் திட்டமிட்ட கொலைகளை கட்டுபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட சட்ட மசோதா இன்று குஜராத் சட்டப்பேரவையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது. இந்த மசோதா மூலம் தொலைபேசி உரையாடல்களை போலீஸ் இடைமறித்து கேட்டு அதை நீதிமன்றத்தில் ஆதரமாகவும் சமர்பிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
இந்த மசோதா இதற்கு முன் இரண்டு ஜனாதிபதிகளால் மூன்று முறை மறு ஆய்வு செய்யுமாறு திருப்பி அனுப்பட்டது. இந்த நிலையில், மேற்கண்ட சர்ச்சைக்குரிய மசோதா இன்று காங்கிரஸ் கட்சியின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் குஜராத் சட்டபேரவையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2004 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் முறையே, ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல் ஆகியோரால் மூன்று முறை நிராகரிக்கப்பட்ட நிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் ஜனாதிபதி ஒப்புதலுக்காக இந்த மசோதா இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த மசோதா மூலம், போலீஸ் கட்டுபாட்டில் இருக்கும் கைதிகள் அளிக்கும் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்பிக்க முடியும். அதேபோல், போலீஸ் கட்டுபாட்டை 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக அதிகரிக்கவும் இந்த சட்டம் அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment