Latest News

இந்தியாவில் வரிகட்டாத 18 மிகப்பெரிய நிறுவனங்களின் பெயரை வெளியிட்டது வருமான வரித்துறை


இந்தியாவில் வரிகட்டாத 18 மிகப்பெரிய நிறுவனங்களின் பெயரை வருமான வரித்துறை வெளியிட்டு உள்ளது. இந்த நிறுவனங்கள் சுமார் 500 கோடி வரையில் அரசுக்கு வரிசெலுத்த வேண்டியதுள்ளது. இவற்றில் 11 நிறுவனங்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவை என்று தெரியவந்து உள்ளது.

“பொது இணையதளத்தில் இந்த பெயர்கள் வெளியிடுவது, அவைகள் எங்குள்ளது என்பதில் சாதாரண மக்கள் வருமானவரித்துறைக்கு உதவ முன்வரமுடியும் என்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் ஆகும். இந்த நடவடிக்கை சட்டவிரோதமாக செயல்படும் நிறுவனங்களுக்கு எதிராக பொது விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்யும். இந்த பெயர்கள் முன்னதாக துறையின் இணையதளத்தில் போடப்பட்டது,” என்று வருமானவரித்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்து உள்ளார். முதல் முறையாக வரிகட்டாதவர்கள் விபரம் பொதுமக்கள் மத்தியில் வைக்கப்பட்டு உள்ளது.

நிறுவனங்கள் நிலுவையில் உள்ள வரிகளை கட்டுவதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்த நிறுவனங்களின் பெயரை இணையதளத்தில் வெளியிட உத்தரவிட்டது. வரிக்கட்டாத நிறுவனங்களில் 11 குஜராத் மாநிலத்தை சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது. “வரிகட்டாதவர்கள் உடனடியாக கட்டுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் என்று” தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“முதல் முறையாக வருமான வரித்துறை பொது இணையதளத்தில் வரிகட்டாதவர்களின் பெயரை (10 கோடிக்கு மேல்) இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது,” என்று மூத்த வருமானவரித்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.

“வருமான வரித்துறை பொது நோட்டீசில், வரிகட்டாதவர்களின் பான் நம்பர் மற்றும் கடைசியாக தெரிவிக்கப்பட்ட முகவரி ஆகியவற்றை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக வெளியிட்டு உள்ளது” என்று அதிகாரி தெரிவித்து உள்ளார். நடப்பு நிதியாண்டின் கடைசி நாளான இன்று வெளியிட்டு உள்ளது.

வருமானவரித்துறை வெளியிட்டுள்ள நிறுவனங்கள் பட்டியலில் புளு இன்பர்மேஷன் டெக்னாலேஜ் நிறுவனம் ரூ. 75.11 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. சோமானி சிமெண்ட் – ரூ. 22.47 கோடி, ஆப்பிள்டெக் சொலுஷன் – ரூ. 27.07 கோடி, ஜூபிட்டர் பிசினஸ் 21.31 கோடி, ஹிராக் பயோடெக் ரூ. 18.54 கோடியாகும்.

மற்றும் குஜராத் நிறுவனங்களும் இதில் இடம்பெற்றுள்ளது. பயோ பார்மா & ஹெல்த்கேர் – ரூ. 17.69 கோடி, பயான் & பெர்ரி அலோய்ஸ் – ரூ. 17.48 கோடி, லக்மிநாராயண் டி தாக்கார் – ரூ. 12.49 கோடி, விராக் டெயிங் & பிரிண்டிங் – 18.57 கோடி, பூனம் இண்டுஸ்டீரிஸ் – ரூ. 15.84 கோடி, குன்வார் அஜய் புட் பிரவேட் லிமிட் – ரூ. 15 கோடி ஆகும்.

ஜெய்பூரை சேர்ந்த கோல்டுசுஹ் டிரட் இந்தியா – ரூ. 75. 47 கோடி, கொல்கத்தாவை சேர்ந்த விக்டோர் கிரிடிட் & கன்ஸ்டரக்சர் -ரூ. 13.81 கோடி, மும்பையை சேர்ந்த நோபர் மெர்சண்டிஸ் – ரூ. 11.93 கோடியுடன் பட்டியலில் இடம்பெற்று உள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.