2014ம் ஆண்டு அக்டோபர் – டிசம்பர் மாதங்களில், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் 22 சதவீத பங்கை மைக்ரோமாக்ஸ் நிறுவனம் தன்னகத்தே வைத்துள்ளதாக Canalys தெரிவித்துள்ளது.
உலகின் ஸ்மார்ட்போன் சந்தையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில முன்னணியில் மைக்ரோமாக்ஸ் உள்ளதுடன், அதற்கடுத்த இடங்களில் சாம்சங், கார்பான் மற்றும் லாவா நிறுவனங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோமாக்ஸ் நிறுவனத்தின் canvas nitro மற்றும் canvas hue உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களே விற்பனையில் முன்னிலை பெற காரணமாக அமைந்திருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோமாக்ஸ் நிறுவனம் தமது சக போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் விரைவாக தமது சாதனங்களின் மீதான முறையீடுகளை மாற்றியமைப்பதுடன், உள்ளுர் மொழிகள் பலவற்றையும் உள்ளடக்கியிருப்பதன் காரணமாக உள்ளுர் வாடிக்கையாளர்கள் அதனை விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment