Latest News

  

அளவுக்கு அதிகமாக வியர்ப்பது நல்லதா ? கெட்டதா ஓர் பார்வை !!


வியர்ப்பது நல்லதுதான் என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் அளவுக்கு அதிகமாக வியர்த்தால்?? அதுவும் குண்டாக இருப்பவர்களுக்கு அதிகளவில் வியர்க்கும். இது நல்லதா??

நிச்சயம் நல்லதுதான். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக வியர்க்கின்றதோ அந்தளவிற்கு நல்லதாம். பலர் அந்த வியர்வையைக் கட்டுப்படுத்த நிறைய முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால், வியர்ப்பதால் உடல் எடை குறையுமாம். வியர்வை அதிகம் வந்தால், உடல் பருமனானது குறையும். அதுமட்டுமின்றி, வியர்வை வெளியேறுவதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. எனவே, அதிகம் வியர்த்தால், சற்று வியர்க்க வழிவிடுங்கள்.

ஆனால், தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் வியர்வை அதிகம் வெளியேறினால், உடலின் நீர்ச்சத்தானது குறைந்துவிடும்.

இன்றைய ஹெல்த் டிப்ஸ் பகுதியில் வியர்ப்பதினால் ஏற்படும் நன்மைகளைக் காணலாம்…

பொலிவான சருமம் வேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்டால், நன்கு வியர்க்கவிடுங்கள். ஏனெனில் வியர்க்கும் போது சருமத்துளைகளானது விரிவடைந்து, அதன் வழியே வியர்வை வெளியேறுவதால், சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, சருமத்தை பொலிவாகவும், மென்மையாகவும் மாற்றுகிறது.

வியர்வை அதிகம் வெளியேறினால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது ஊக்குவிக்கப்படும். அதனால் தான் காய்ச்சலின் போது வியர்த்தால், காய்ச்சலானது குணமாகிவிடுகிறது.

உடற்பயிற்சியின் போது வெளிவரும் வியர்வையானது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. அதிலும் வாக்கிங் அல்லது வேறு ஏதேனும் உடற்பயிற்சி செய்தால், இதயமானது வேகமாக இரத்தத்தை அழுத்துவதால், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருந்து, உடலின் மெட்டபாலிசமானது அதிகரித்து, உடல் எடை குறைய வழிவகுக்கிறது.

தினமும் தொடர்ந்து செய்து வந்தால், சிறுநீரகமானது சீராக செயல்பட்டு, சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர், அதிக அளவில் தண்ணீர் மற்றும் இதர பானங்களான இளநீரை குடிக்க தோன்றுவதே காரணமாகும். இதனால் தான் சிறுநீரகத்தில் நச்சுக்கள் தங்காமல் வெளியேறிவிடுகிறதாம்.

மேலும், ஆய்வு ஒன்றில் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது நன்கு வியர்வையானது வெளியேறினால், மன அழுத்தம், சோர்வு போன்றவை நீங்கி, மனநிலையானது புத்துணர்ச்சி அடைவதாக சொல்கிறது. இதற்கு காரணம் உடற்பயிற்சியின் போது மூளையில் உள்ள கெமிக்கல்களானது ஊக்குவிக்கப்பட்டு, ஒருவரின் மனதை சந்தோஷமாகவும், ரிலாக்ஸாகவும் வைக்க உதவுகிறது.

1 comment:

  1. சிறந்த முறையில் உங்களுடைய பதிவுகள் அமைந்துள்ளது மிக்க நன்றி சகோ!!!

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.