கொச்சி விமான நிலையத்தில் ஏர்-இந்தியா விமானம் தரையிறங்கும்போது டயர் வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
டெல்லியில் இருந்து ஏர்-இந்தியா விமானம் ஒன்று கொச்சி நோக்கி புறப்பட்டு வந்தது. இதில் 161 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் இருந்தனர். இந்த விமானம் கொச்சியில் இன்று காலை 9.10 மணிக்கு தரையிறங்கியது. அப்போது பின்பக்க டயர் திடீரென வெடித்து புகை வெளியேறியது. எனினும் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் குறிப்பிட்ட ரன்வேயில் விமானத்தை விமானி பத்திரமாக தரையிறக்கினார். இதனால், பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இச்சம்பவம் கொச்சி விமான நிலையத்தில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சார்ஜா செல்ல வேண்டிய விமானம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
No comments:
Post a Comment