Latest News

  

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு சாவுமணி அடித்தது மோடி அரசு !!


தமிழகத்துக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களைநிறைவேற்ற 2015- 2016-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தேவையான நிதி ஒதுக்கப்படாதது மட்டுமல்ல; அந்த திட்டங்களையே மோடி அரசு கைவிட்டுள்ளது.கடந்த 2013- 2014-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 12 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு, கடந்தகாங்கிரஸ் கூட்டணி அரசால் போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலும், 2014- 2015-ம் ஆண்டுக்கான பாஜக அரசின் பட்ஜெட்டிலும் போதிய புதிய ரயில்கள் அறிவிக்கப் படவில்லை.

அதிலும், கடந்த 3 ஆண்டுகளில் தமிழக தென் மாவட்டங்களுக்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்படவில்லை.தமிழகத்துக்கு ஏற்கனவே அறி விக்கப்பட்ட ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற ரூ.10 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது. ஆனால், இதுவரை ரூ.679 கோடி நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி அனைத்தும் தமிழகத்தின் புதிய ரயில் பாதை திட்டங்கள், இரு வழிப்பாதை திட்டங்கள், அகலப்பாதை திட் டங்களுக்கானதாகும்.

2015- 2016-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வியாழக்கிழமை தாக்கல் செய்தார். ஆனால், அவர் இத்திட்டங்களுக்கு சாவுமணியே அடித்தார். ஏற்கனவே, அவர் ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், ரயில்வேத் துறையில் `மறுமலர்ச்சியை’ ஏற் படுத்தப் போவதாக 7 குழுக்களை அமைத்தார். குழுக்களின் பரிந்து ரைப்படி, நாடு முழுவதும் அனுமதிஅளிக்கப்பட்ட சுமார் 160 திட்டங் கள் கிடப்பில் போடப்பட்டன. அதில், தமிழகத்துக்கான 24 திட் டங்களும் அடங்கும்.

கடந்தகால ஆட்சிகளில் அறிவிக் கப்பட்டு செயல்படுத்தப்படாமல் இருக்கும் திட்டங்கள் தொடர் ந்து செயல்படுத்தப்பட்டு முடிக்கப் படும் என்று பாஜக அரசின் ரயில்வேஅமைச்சராக முதலில் பொறுப்பேற்ற சதானந்த கௌடா கடந்த பட்ஜெட்டில் தெரிவித்தார்.முக்கிய ரயில் திட்டமான சென்னை- கன்னியாகுமரி இரு வழிப்பாதைத் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வந்தது.அதேபோல, சென்னை- நாகர்கோவில் வரையிலான வழித்தடத்தில் இரு வழிப்பாதை திட்டம், செங்கல்பட்டு- திண்டுக்கல் இருவழிப்பாதை திட்டம் முடங்கி உள்ளன.

இவற்றை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்கள் ரயில்வே அமைச்சகத்திடம் இருந்து வராமல் இழுபறியாகவே ஆண்டுகள் ஓடிக்கொண்டு இருந்தன. இவை அனைத்தையும் தற்போது ஒழித்து விட்டது மோடி அரசின் ரயில்வே பட்ஜெட்.

ராயபுரம் ரயில் முனையம்

2012- 2013-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் சென்னை ராயபுரம் ரயில் நிலையம் 4-வது ரயில் முனையமாகவும், தாம்பரம் ரயில் நிலையம் 3-ஆவது ரயில் முனையமாகவும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.ஆனால், ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற எவ்விதமுயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும், 2013-2014-ஆம்ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் ராயபுரத்தை ரயில் முனையமாக மாற்றுவதற்கான எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.

ஆனால், சிறப்பு திட்டத்தின் கீழ் ராயபுரம் ரயில் முனையமாக்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு, நடைமேடைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. அது இனி தொடருமா என்பது தெரியவில்லை.

கிடப்பில் போடப்பட்ட 100 ஆண்டு கோரிக்கை

ஈரோட்டிலிருந்து தாராபுரம் வழியாக பழனி வரையிலான ரயில்வே திட்டம் கிடப்பில் போடப்பட்டது.ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில், ஈரோட்டிலிருந்து தாராபுரம் வழியாக பழனி வரை புதிய ரயில் பாதை அமைக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.இப்பகுதி மக்களின் 100 ஆண்டுகால கோரிக்கையை ஏற்ற காங்கிரஸ் அரசு இத் திட்டத்தை நிறைவேற்ற 2011-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கியது. 2011-ல் ரூ.33 கோடியும், 2012-ல் ரூ.10 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு தொகை ஒதுக்கப்பட்ட பிறகும் சர்வே பணிகளைத் தவிர வேறு எந்தப் பணிகளும் நடைபெறவில்லை.

ஒதுக்கப்பட்ட பணம் என்னவானது என்ற கேள்விஎழுந்த போது, ரயில்வேத் துறை திடீரென திட்டத்தை நிறுத்தி வைத்தது. காலப்போக்கில் அதைகிடப்பில் போட்டுவிட்டது. இதனால் இப்பகுதி மக்களின் 100 ஆண்டுகால கனவு கேள்விக்குறியாகவே உள்ளது.

கைவிடப்பட்ட புதிய ரயில் பாதை திட்டங்கள்

1. சென்னை- ஸ்ரீபெரும்புதூர் (வழி – பூந்தமல்லி)2. ஆவடி- ஸ்ரீபெரும்புதூர்3. இராமேஸ்வரம்- தனுஷ்கோடி4. தஞ்சாவூர்- அரியலூர்- சென்னை எழும்பூர்5. திண்டிவனம்- கடலூர் (வழி – புதுச்சேரி)6. மயிலாடுதுறை- திருக்கடையூர்- திருநள்ளாறு- காரைக்கால்7. ஜோலார்பேட்டை- ஒசூர் (வழி – கிருஷ்ணகிரி)8. சத்தியமங்கலம்- மேட்டூர்9. ஈரோடு- சத்தியமங்கலம்10. சத்தியமங்கலம்- பெங்களூரு

11. மொரப்பூர்- தருமபுரி (வழி – முக்கனூர்)12. மதுரை- காரைக்குடி (வழி – திருப்பத்தூர்)13. வில்லிவாக்கம்- காட்பாடி14. திருவண்ணாமலை- ஜோலார்பேட்டை15. மதுரை- கோட்டயம்16.அரக்கோணம்- திண்டிவனம் (வழி- வாலாஜாபேட்டை)17. சிதம்பரம்- ஆத்தூர் (வழி – அரியலூர்)18. திண்டுக்கல்- கூடலூர்19. திண்டுக்கல்- குமுளி20. காட்பாடி- சென்னை (வழி – பூந்தமல்லி)21. கும்பகோணம்- நாமக்கல்22. மானாமதுரை- தூத்துக்குடி23. நீடாமங்கலம்- பட்டுக்கோட்டை (வழி – மன்னார்குடி)24. தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை

பாதியில் கைவிடப்பட்டவை

1. சென்னை- கடலூர்2. பழனி- ஈரோடு3. திண்டிவனம்- செஞ்சி-திருவண்ணாமலை4.திண்டிவனம்- வாலாஜா- நகரி (திண்டிவனம்- வாலாஜா வரை கைவிடப்படுகிறது)5.ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி அகலப்பாதைப் பணி6. மதுரை- போடி7. திண்டுக்கல்- கோவைஇரு வழிப்பாதைப் பணி1. திருச்சி- தஞ்சாவூர்2. இருகூர்- போத்தனூர்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.