மொபைல்களில் இருந்து மேற்கொள்ளப்படும் ரோமிங் கால்களுக்கான கட்டணம் 35%-ம் எஸ்.எம்.எஸ்.களுக்கான கட்டணம் 80%-மும் குறைக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக டிராய் முன்வைத்துள்ள பரிந்துரைகள்:
மொபைல்களில் இருந்து மேற்கொள்ளப்படும் ரோமிங் கால்களுக்கு தற்போது ஒரு நிமிடத்துக்கு ரூ1 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நிமிடத்துக்கு 65 பைசாவாக குறைக்கலாம். அதேபோல் எஸ்.டி.டி. கால்களுக்கான கட்டணத்தை ஒரு நிமிடத்துக்கு ரூ1.50- என்பது ரூ1 ஆகக் குறைக்கலாம். இன்கமிங் கால்களுக்கு ஒரு நிமிடத்துக்கு 75 பைசா என்பது இனி 45 பைசாவாக இருக்கலாம். எஸ்.டி.டி. எஸ்.எம்.எஸ்களுக்கு தற்போது ரூ1.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இனி 25 பைசாவாக அதாவது 80% குறைக்கலாம். பொதுவாக எஸ்.எம்.எஸ். கட்டணம் ரூ1 என்று இருப்பதை இனி அதிகபட்சமாக 20 பைசாவாக இருக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் மீதான கருத்துகள் மார்ச் 13-ந் தேதி ஆராயப்பட்டு அதன் பின்னர் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு டிராய் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment