திருவனந்தபுரம்: கேரளாவில் நள்ளிரவு நேரத்தில் வானத்தில் இருந்து பலத்த சத்தத்துடன் தீப்பிழம்பு விழுந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ராட்சச எரிகல் தாக்கியதா என்பதை அறிய ஆய்வாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கேரளாவின் எர்ணாகுளம், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிற்பகலில் திடீரென மேக மூட்டம் ஏற்பட்டது. வெயில் குறைந்து மேகமூட்டமாகக் காணப்பட்ட போது, தொடர்ந்து மக்கள் புழுதியில் தவித்தனர். இரவு நேரமாகியும் வெப்பத்தின் தாக்கம் கூடியதே தவிரக் குறையவில்லை. இந்நிலையில், நள்ளிரவு 10 மணி அளவில் வானத்தில் திடீரென பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் விமானம் ஏதும் விபத்தில் சிக்கியதோ என்ற அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
மிகப்பெரிய தீப்பிழம்பு...
அப்போது வானத்தில் பெரிய தீப்பிழம்பு காணப்பட்டுள்ளது. மக்கள் அதிர்ச்சியும், அச்சமும் கலந்து அதனைப் பார்த்துக் கொண்டிருந்த போதே, அது பூமியை நோக்கி கீழே விழுந்துள்ளது. இதனால், பயத்தில் அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓடினர்.
திடீர் மழை...
கொச்சி, எர்ணாகுளம் மட்டுமின்றி முளதுருத்தி, கோளஞ்சேரி, எரூர், பரவூர் ஆகிய பகுதிகளிலும் இந்த தீப்பிழம்பு தென்பட்டுள்ளது. தீப்பிழம்பு விழுந்த பின்பு மாநிலத்தின் பல பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது.
மக்கள் பீதி...
இதனால், பீதியடைந்த கேரளா மக்கள் நேற்று தூக்கமின்றி விடிய விடிய விழித்திருந்தனர். இந்த தீப்பிழம்பால் வேறு ஏதேனும் ஆபத்து நேருமோ என்ற அச்சம் அவர்கள் மத்தியில் காணப்படுகிறது.
வானிலை இலாகா அதிகாரிகள்...
இந்த தகவல் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும், வானிலை இலாகா அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. மேலும் தீயணைப்பு படையினரும், சம்பவ இடத்திற்கு சென்றனர்.
மிகப்பெரிய பள்ளம்...
இதற்கிடையே, எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கரிமல்லூர் கிராமத்தில், வானத்தில் இருந்து விழுந்த எரிகல் தாக்கி பள்ளம் ஏற்பட்டதாக மாநில இயற்கை பேரிடர் தடுப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது
கருகிப் போன தரைப்பகுதி...
பள்ளத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள தரைப்பகுதி முழுவதும் கருகிப் போய் கிடப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, மாநில இயற்கை பேரிடர் தடுப்பு துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.
விசாரணை...
இது தொடர்பாக மாநில அமைச்சர் அடூர் பிரகாஷ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சீன ராக்கெட்டின் பாகங்கள்...?
சமீபத்தில், இதுபோன்ற சம்பவங்களில் அமெரிக்க, ரஷ்யா மற்றும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது. அதற்கு நாசா, ‘சீன ராக்கெட் யோகன் வேக்சிங்-26 செயற்கைக்கோள் சுமந்து சென்ற போது விழுந்து சின்னாபின்னமானது. அப்போது அதன் குப்பைகள் விழுந்து இருக்க முடியும்' என்று விளக்கம் தெரிவித்தது.
அமெரிக்காவிலும் தோன்றியது....
இதேபோல தீ பந்துகள், அமெரிக்காவின் மேற்கத்திய பகுதிகளில் வானத்தில் தோன்றியதாக நாசா தெரிவித்ததாக விஞ்ஞானி ராஜகோபால் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment