கொல்கத்தா மாநில பெகலா பகுதியிலுள்ள பா.ஜ.க அலுவலகத்தில் வைத்து 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் அக்கட்சியின் நிர்வாகி ஒருவரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பா.ஜ.க சார்பில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரிதேஷ் திவாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கட்சி அலுவலகத்திற்குள் வைத்து நடைபெற்ற இச்சம்பவத்தை தங்களுடைய கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும், குற்றவாளி யாராக இருந்தாலும் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment