டெல்லி முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அண்மையில் நடந்த டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67-ஐ வென்று ஆட்சியை கைப்பற்றியது.தேர்தல் வெற்றிக்கு பின்பு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் டெல்லியில் ஆட்சி அமைக்க துணைநிலை கவர்னர் நஜீப் சுங்கை சந்தித்து உரிமை கோரினார்.
கெஜ்ரிவால் முதல்-மந்திரி பதவி ஏற்கும் விழா டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இன்று 12.15 மணியளவில் நடைபெற்றது. இதில் டெல்லியின் 8 வது முதல் மந்திரியாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் பதவிபிரமாணம் செய்து வைத்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் தலமையிலான அமைச்சரவையில் மந்திரிகளாக மனிஷ் சிசோடியா, ஆசிம் அகமது கான், சந்திப் குமார், சத்யேந்தர் ஜெய்ன், கோபால் ராய், ஜிதேந்தர்சிங் தோமர் ஆகியோரும் பொறுப்பேற்றனர்.
மந்திரிகளுக்கான துறை விவரங்க வருமாறு:-
மனிஷ் சிசோடியா - பொதுப்பணி, கல்வி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை;
உணவு மற்றும் பொது வழங்கல் துறை -ஆஷிம் அகமது கான்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பட்டு துறை- சந்தீப் குமார்
சுகாதரத்துறை மற்றும் தொழில்துறை - சத்யேந்திர ஜெயின்
போக்குவரத்து மற்றும் தொழிலாளர் துறை- கோபால் ராய்
சட்டத்துறை மந்திரி- ஜிதேந்திர சிங் தோமர்
வரலாற்று சிறப்பு மிக்க ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவை காண ஒரு லட்சத்துக்கும் மேற்ப்ட்டோர் கூடியிருப்பதால் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் வசதிக்காக 12 எல்.சி.டி டிவிக்களும் மைதானத்தில் ஆங்கேங்கே வைக்கப்பட்டுள்ளன. கடந்த முறை முதல் மந்திரியாக பதவியேற்ற போது டெல்லி மெட்ரோ ரயில் வந்தார். ஆனால் இம்முறை அதை தவிர்த்துவிட்டு தனது குடும்ப உறுப்பினர்களுடன் காரில் வந்தார்.
No comments:
Post a Comment