குடியரசு தின அணிவகுப்பை ஒபாமா பார்வையிட்ட போது பறந்த மர்ம விமானம் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
3 நாள் சுற்றுப் பயணமாக டெல்லி வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, கடந்த மாதம் 26–ந் தேதி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டார். அவர் தலைவர்களுடன் அமர்ந்து அணிவகுப்பை பார்வையிட்டு கொண்டு இருந்த போது, இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம விமானம் ஒன்று பறப்பது ரேடார் மூலம் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து உடனடியாக கட்டளை பிறப்பிக்கப்பட்டு, அந்த மர்ம விமானத்தை வேட்டையாடுவதற்காக சாபுவாவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இருந்து 2 சுகோய்–30 ரக போர் விமானங்கள் அந்த பகுதியை நோக்கி விரைந்தன. ஆனால் சிறிது நேரத்தில் அந்த மர்ம விமானம் ரேடாரின் பார்வையில் இருந்து மறைந்து காணாமல் போனது. இதனால், தளத்துக்கு திரும்புமாறு 2 போர் விமானங்களுக்கும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதன்பேரில் அந்த விமானங்கள் உடனடியாக தளத்துக்கு திரும்பின.
ஒரு சில நிமிடங்களுக்குள் நடந்து முடிந்து விட்ட இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.
No comments:
Post a Comment