பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பயன் தரும் வகையில், SSLC எனும் மென்பொருள் (app) மூலம் கடந்த வருடங்களில் வெளியான கேள்வித்தாள்களை முற்றிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளஇயலும்.
ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் டேப்லெட்களுக்கான இந்த மென்பொருள் மூலம் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை மூலம் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள், கடந்த வருட கேள்வித்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள இயலும்.
தற்போது 2011 மற்றும் 2013 வருடத்தின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான கேள்வித் தாள்களை பதிவிறக்கம் செய்ய முடிகிறது.
இந்த மென்பொருளை தயாரித்து இலவசமாக வெளியிட்டுள்ள சகோதரர் முஹம்மத் ரஷீத், கூடுதலான கேள்வித்தாள்களை இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதாகவும், அடுத்த வெர்ஷனில் அதிகமான கேள்வித்தாள்கள் பதிவிறக்கம் செய்யும் வகையில் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்த மென்பொருளுக்கான Google Play பக்கத்திற்கு கீழே க்ளிக் செய்யவும்.
https://play.google.com/store/apps/details?id=com.rasheed.hikma&hl=en
பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், மாணவர்கள் கடந்த வருடங்களின் கேள்வித்தாள்களைத் தேடிக் களைக்கும் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மென்பொருள் பற்றிய விபரங்களை அனைத்து மாணவர்களும் அறியச் செய்து பயன்படுத்தலாமே?
No comments:
Post a Comment