WSC அணிக்கு TIYAவின் நல்வாழ்த்துக்கள்
அதிரை ஆசாத் நகர் [ தரகர் தெரு ] ஸ்போர்ட்ஸ் கிளப் [ ASC ] நடத்தும் 10 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி நேற்று இரவு முகைதீன் ஜும்மா பள்ளி எதிரே அமைந்துள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இன்று இறுதி ஆட்டமாக அதிரை WSC அணியும், காசாங்காடு அணியும் மோதின. விருவிருப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இறுதியில் WSC அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற WSC அணியை பலரும் பாராட்டினர்.
செய்தி : முஹம்மது ஷாஃபி
படங்கள்: காலித் அஹமது
நன்றி :அதிரைநியூஸ்
No comments:
Post a Comment