பாராளுமன்ற உறுப்பினர் அஸதுத்தீன் ஒவைஸி தனது கட்சியினை தமிழகத்தில் தொடங்குகிறார்.
அஸதுத்தீன் ஒவைஸி மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் என்ற கட்சியின் தலைவராக இருக்கிறார். இவரது கட்சி ஆந்திராவில் வலிமையாக உள்ளது. அண்மையில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் இந்தக் கட்சி போட்டியிட்டு, இரு இடங்களில் வெற்றி பெற்றது.
தற்போது அவரது கட்சியினை தமிழகத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக தமிழகத்தைச் சார்ந்த ஏறத்தாழ 500 பேர் அஸதுத்தீன் ஒவைஸியின் சகோதரர் அக்பருத்தீன் ஒவைஸியை சந்தித்துள்ளனர்.
வரும் பிப்ரவரி 27 அன்று கட்சியினை தமிழகத்தில் ஆரம்பிக்கலாம் என அக்பருத்தீன் தன்னைச் சந்தித்தவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது
No comments:
Post a Comment