மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்யும் மருந்து கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. டெங்குக் காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் ஆதார நிலைகளை அழிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் மருந்துகள், ரத்தம், தட்டணுக்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான சிசிக்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் "போலி மருத்துவர்கள் யாரேனும் சிகிச்சை அளிக்கின்றனரா என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்வதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருந்து கட்டுப்பாடு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக" அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : இன்நேரம்
No comments:
Post a Comment