அபுதாபி : ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக மோசமான தீவிபத்துக்களில் ஒன்றாக வெள்ளி காலை அன்று அபுதாபியில் உள்ள முஸாபா பகுதியில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 தொழிலாளர்கள் பலியானதோடு 8 தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள முஸாபா தொழிற்பேட்டையில் உள்ள இரு மாடி கட்டிடம் ஒன்றில் வெள்ளி காலை 3.30 மணிக்கு தீப்பிடித்தது. கட்டிடத்தின் கீழ் தளத்தில் டயர் கடை உள்ளிட்ட ஏழு கடைகள் இருந்தன. பொருட்கள் சேகரித்து வைக்க கூடிய அதன் முதல் தளம் மற்றும் மேல் தளத்தில் சட்டத்துக்கு புறம்பாக தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
டயர் கடையில் அதிகாலை 3.30 மணிக்கு பற்றிய தீ மளமளவென்று இரு தளங்களுக்கும் பரவியது. அதிகாலை நேரமென்பதால் அனைவரும் தூக்கத்தில் இருந்தனர். 3.45 மணிக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்த போதும் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியானர்கள். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள ஷேக் கலிபா மெடிகல் சிட்டிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment