இதுகுறித்து டிவிட்டரில் அவர் கூறுகையில், ஜெயந்தி நடராஜன் ஆண்டிஜி காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார். 1996ம் ஆண்டு அவர் மூப்பனார் காங்கிரஸில் சேர்ந்தார். பின்னர் காங்கிரஸுக்குத் திரும்பி வந்தார். மத்திய அமைச்சரானார். காங்கிரஸை விட்டு இப்போது விலகியுள்ளார். இது ஒரு பெரிய விஷயமே இல்லை என்று கூறியுள்ளார் நிருபம். அதேபோல டிவி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் ராகுல் காந்திக்கு எதிராக ஜெயந்தி நடராஜன் கூறியுள்ள புகார்கள் தவறானவை, பொய்யானவை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இந்தக் கடிதத்தை அவர் பயன்படுத்தியுள்ளார் என்று நிருபம் கூறியுள்ளார்.
பதவிக்காக கட்சி மாறுபவர் ஜெயந்தி நடராஜன். அவர் ராகுல் காந்தி குறித்து கூறியுள்ள அனைத்துப் புகார்களும் பொய்யானவை. அவர் விலகியது குறித்து காங்கிரஸ் கட்சி கவலைப்படவே இல்லை என்று அக்கட்சியின் முன்னாள் எம்.பியான சஞ்சய் நிருபம் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment