சான் பிரான்ஸ்சிஸ்கோ: உலகெங்கும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் கைவசம் வைத்திருக்கின்ற வாட்ஸ்-அப் நிறுவனம் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாட்ஸ்-அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் வாங்கிய பின் அதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி உலகெங்கும் 500 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த வாட்ஸ்-அப், மேலும் ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நேற்று வாட்ஸ்-அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதுவரை மொபைல் போனில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த வாட்ஸ்-அப் செயலியை இனி இணையதளத்திலும் பயன்படுத்தலாம். தற்போது இந்த புதிய சேவையை கூகுள் குரோம் பிரவுசரில் மட்டுமே பயன்படுத்த முடியும்" என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த சேவையை ஆப்பிள் நிறுவனம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக ஐபோனில் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment