மின் இணைப்பு உள்ள வீடுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் விநியோகிப்பதை நிறுத்துமாறு அரசுக்கு பரிந்துரைகள் வந்துள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற எரிசக்தி பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் இது குறித்து அவர் பேசியதாவது:
கடந்த 2011-இல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில், மின் இணைப்பு உள்ள வீடுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கக் கூடாது என்று அரசுக்கு பரிந்துரைகள் வந்துள்ளன.
இது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்ட பிறகே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மானிய விலையில் மண்ணெண்ணெய் வாங்குபவர்கள் அனைவருக்கும் மின் விநியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதன் பலன் பொதுமக்களைச் சென்றடையவில்லை எனக் கூறப்படுகிறது. அடுத்த வாய்ப்பு வரும்போது நிச்சயம் எரிபொருள் விலை குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த நிதியாண்டில் மண்ணெண்ணெய் மானியத்துக்காக அரசு, ரூ.30,575 கோடி ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment