இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக ஏ.எஸ்.கிரண்குமார் நியமிக்கப்பட்டார். 1975-ம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்த இவர் சாட்டிலைட் அப்ளிகேஷன் சென்டரின் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோள் அனுப்பிய சாதனைக்கு முக்கிய காரணமாக இருந்தவர்களுள் இவரும் ஒருவராவார்.
பாஸ்கரா டிவி பேலோடு முதல் சந்திராயன் -1 வரை அனைத்து சாதனைகளிலும் இவரது பங்கு உண்டு. குறிப்பாக, LEO, GEO கொண்ட இமேஜிங் சென்சார்கள், எலக்ட்ரோ இமேஜிங் சென்சார்கள் மற்றும் செயற்கைகோள் வடிவமைப்பில் இவரது பங்களிப்பு அதிகம்.
இயற்பியலில் பட்டம் பெற்றுள்ள இவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் நேஷனல் கல்லூரியில் எம்.எஸ்.சி. எலக்ட்ரானிக்ஸ் படிப்பையும் முடித்தவர். மத்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment