அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வரலாறு காணாத அளவில் பனிப்புயல் வீசக்கூடும் என தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நியூயோர்க் நகரில் உள்ள வடகிழக்கு பகுதியான காரிடரில் இந்த பனிப்புயல் வீச வாய்ப்பு உள்ளதாகவும், குறிப்பாக நியூஜெர்ஸி முதல் மெயின் வரை சுமார் 3 அடி வரை பனி பதிவாகும் அளவிற்கு பனிப்புயல் மோசமாக இருக்கும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த பனிப்புயலானது அதிகமான பனிப்பொழிவையும், மரங்களை பெயர்க்கும் அளவிற்கு வேகமான காற்றையும் உண்டாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பனிப்புயல் குறித்து பேசிய நியூயோர்க் மேயர் Bill de Blasio, இது நியூயோர்க் வரலாற்றில் நிகழாத மோசமான பனிப்புயலாக இருக்கும். பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயனிக்க வேண்டும்.
அலுவலகங்கள் செல்பவர்கள் திங்கள் மற்றும் செவ்வாய் தினங்களில் வீட்டிலிருந்தே அலுவலக பணிகளை செய்யும் வகையில் ஏற்பாடுகளை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், நியூயோர்க் கவர்னர் Andrew Cuomo கூறுகையில், பனிப்புயலை எதிர்கொள்ள அரசு அனைத்து விதமான முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நியூயோர்க் நகரில் செயல்பட்டு வரும் Delta Air Lines சுமார் 600 விமானங்கள், Southwest Airlines நிறுவனம் 130-க்கும் அதிகமான விமானங்களை நிறுத்தியுள்ளன. மேலும், United Airlines நிறுவனம் தனது அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
No comments:
Post a Comment