இந்தாண்டில் ட்விட்டர் நிறுவனம் சொந்தமாக வீடியோ சேவை வழங்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட ட்விட்டர், கூகுளின் யூட்யூப் சேவைக்கு போட்டியாக ட்விட்டர் சேவை துவங்கப்பட இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.
மற்ற இணையங்களில் இருந்து வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்வதற்கு பதிலாக வாடிக்கையாளர்கள் ட்விட்டர் மூலம் வீடியோக்களை பதிவேற்றம் மற்றும் பகிர்ந்து கொள்ளவும் முடியும். இந்த வீடியோக்கள் MOV மற்றும் MP4 வடிவிலும் இருக்கலாம்.
ட்விட்டர் மூலம் வீடியோக்களை பார்ப்பது மட்டுமின்றி, வீடியோக்களை பதிவு செய்து எடிட் செய்து ட்விட்டரில் பகிர்ந்தும் கொள்ள முடியும் என்று அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய அம்சம் இந்தாண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது.
ட்விட்டர் வீடியோக்களை வேறு எங்கும் பதிவு செய்வதை ட்விட்டர் அனுமதிக்காது, மேலும் யூட்யூப் வீடியோக்களை ட்விட்டரில் பதிவேற்றம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment