கர்நாடக மாநிலம், பெங்களுருவில் பள்ளிச் சிறுமி ஒருவர், ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதையடுத்து, ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்குள் புகுந்து புகார் கூறப்பட்ட ஆசிரியரை சரமாரியதாக தாக்கினர்.
பெங்களுரு நகரில் இயங்கி வரும் ஒரு பள்ளியில் பயிலும் 8 வயது மாணவியை, அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் அந்த ஆசிரியரை சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆசிரியரை மீட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இருப்பினும் போலீஸ் வாகனத்தில் இருந்து அந்த ஆசிரியரை இறக்கி அவரை மீண்டும் சரமாரியாக தாக்கினர். பள்ளியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
ஏற்கனவே பெங்களுருவில் இதேபோன்று 3 சம்பவங்கள் நடந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் மீண்டும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
No comments:
Post a Comment