வரலாற்றில் இன்றைய தினம் ஜனவரி – 20
டெல்லியில் உள்ள பிர்லா மாளிகையில் மகாத்மா காந்தி மீது கொலை முயற்ச்சி செய்யப்பட்ட தினம் இன்று. 1947ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்தியா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.
இதே நாளன்று காலை பிர்லா மாளிகையில், காந்திஜி பிரார்த்தணை செய்து கொண்டிருந்த போது, பிர்லா மாளிகைக்கு மிக அருகில் ஒரு வெடி குண்டு வெடித்தது. அதிர்ஷ்ட வசமாக காந்திஜி இந்த தாக்குதலில் இருந்து காப்பாற்றப்பட்டார்.
இச்சம்பவம் அந்நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இதே மாதம், சரியாகப் பத்து நாட்கள் கழித்து 30ம் தேதி கோட்சே என்ற தீவிரவாதியால் காந்திஜி கூட்டம் ஒன்றில் வைத்து துப்பாக்கியால் இரண்டு முறை சுடப்பட்டு மரணமடைந்தார்.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1265 – இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது முதலாவது கூட்டத்தை வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடத்தியது
1892 – முதலாவது அதிகாரபூர்வமான கூடைப்பந்தாட்ட விளையாட்டு மசாசுசெட்சில் இடம்பெற்றது.
1906 – வாரன்ஸ் சர்க்கஸ் (Warren’s Circus) யாழ்ப்பாணம் வந்திறங்கியது. இதுவே யாழ்ப்பாணம் கண்ட முதலாவது சர்க்கஸ் ஆகும்.
1913 – யாழ்ப்பாணம், உடுவிலில் இராமநாதன் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
1936 – எட்டாம் எட்வேர்ட் ஐக்கிய இராச்சிய மன்னனாக முடிசூடினார்.
1929 – வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு-நீளத் திரைப்படம் In Old Arizona திரையிடப்பட்டது.
1969 – முதலாவது துடிமீன் கிராப் விண்மீன் தொகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
இன்றைய சிறப்பு தினம்
அதிபர் பதவியேற்பு தினம் (ஐக்கிய அமெரிக்கா)
தியாகிகள் தினம் (அஜர்பைஜான்)
ஆயுதப்படைகள் நாள் (மாலி)
No comments:
Post a Comment