உத்திரப்பிரதேசத்தில் 65 வயது மூதாட்டியை ஒரு கும்பல் பலாத்காரம் செய்ததில் அந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஃபூல்மணி (65) என்ற மூதாட்டி பல வருடங்களுக்கு முன்பு தனது கணவர் ராம்விருக்ஷ் குஷ்வாஹாவுடன் உ.பிக்கு இடம் பெயர்ந்துள்ளார்.
காஸிப்பூர் மாவட்டத்தில் உள்ள சஹரன்சட்டி என்ற கிராமத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலையில் பார்த்து வந்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன்பு சூளையை மூடி விட்ட நிலையிலும் அந்த கிராமத்தை விட்டுச் செல்லாமல் அங்கேயே வசித்து வந்த நிலையில் கடந்த வருடம் அவரது கணவர் இறந்துவிட்டார்.
இதையடுத்து புதிராம் குஷ்வாஹா என்பவருடன் சேர்ந்து வாழத் தொடங்கிய ஃபூல்மணி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வந்துள்ளார்.
அதை குடிக்க வரும் சிலருடன் சேர்ந்து ஃபூல்மணியும் சாராயம் குடித்து வந்துள்ளார்.
இதுபோல கள்ளச்சாராயம் குடிக்க வந்த சிலர் சேர்ந்து ஃபூல்மணியை, குடிபோதையில் இருந்தபோது பலாத்காரம் செய்தும் சரமாரியாக தாக்கியும் உள்ளனர். பின்னர் அவரை அரை நிர்வாண கோலத்தில் விட்டு விட்டு தப்பி விட்டனர்.
அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் ஃபூல்மணி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் சிலரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். மூதாட்டியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றை வைத்து கடுமையாக தாக்கியதால்தான் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், நான்கு பேர் கொண்ட கும்பல்தான் இதைச் செய்திருக்கலாம் என்றும் கருதும் பொலிசார் சிலரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment