இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷன் விருது என்ன தகுதியின் கீழ் அத்வானிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதனை மத்திய அரசு விளக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் லாலு பிரசாத் யாதவ் கூறுவது :
அத்வானிக்கு என்ன தகுதியின் அடிப்படையில் பத்மவிபூஷன் விருது கொடுக்கப்பட்டுள்ளது என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், அவரது தலைமையில் தான் பாஜக ரத யாத்திரை நடத்தி பாபர் மசூதியை இடித்தார்கள். அதற்காகவா இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்பதனை மத்திய அரசு விளக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், பாஜகவை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மிகச் சரியாக புரிந்து கொண்டுள்ளதுடன், பாஜகவின் முகம் அவருக்கு நன்றாக தெரிந்திருக்கின்றது. அதன் காரணமாகவே மத நல்லிணக்கம் குறித்து அவர் பேசியிருக்கின்றார். மதத்தால் பிரச்சினை செய்யக் கூடாது என்பதை அவர் மறைமுகமாக தனது பேச்சில் குறிப்பிட்டிருக்கின்றார். இது பாஜகவின் முகத்தில் விழுந்த அடியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
குடியரசு தின விழாவில் வெளிநாட்டுத் தலைவர் கலந்து கொண்டது தவறில்லை என்று கூறிய லாலு, அணுசக்தி ஒப்பந்தமானது கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது கொண்டு வரப்பட்டது. அதற்குக் காரணம் பாஜக அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment