Latest News

  

மீண்டும் மார்கழியில் !

மாதங்கள் ஒவ்வொன்றும்
மாற்றம் நிறைந்த தன்மை - அதில்
மார்கழி மாதமோ - மானிடர்
மகிழ்வுக்குச் செம்மை

மார்கழி என்றாலே மனநிறைவு
மலரோடு கொஞ்சிவிளையாடும் மாதமிது
பாரெங்கும் படர்ந்துகிடக்கும் பனிப்பொழிவு
பரிவோடு குளிர்காற்றின் பகல் வரவு

சாரலின் சீண்டுதலில் சுகமாக
சங்கமிக்கும் மனதிற்கு இதமாக

இரவெல்லாம் இயற்கைக்குக் கொண்டாட்டம்
இகவாழ்வில் நாம்கண்ட கண்ணோட்டம்

கார்மேகத் தூரலில் உடல் நடுங்க
கார்த்திகைக்கு விடைகொடுத்து குளிர் துவங்க

காலை வெளுத்தும்
உறங்குமிந்தக் கதிரவன்
காலம் மறந்தே உதித்திடுவான்
இம்மாதம் முழுதும்

தீண்டிவிடும் குளிர்காற்றும் திண்ணமாக
தாண்டிவந்து வருடிவிடும் பனித்துளியாக

பூக்கள் யாவும் புன்னகைத்து மலர்ந்து நிற்கும்
பூங்காற்றும் தேகம் உரசி மணம் வீசும்

ஏக்கமாகி மனதில் நிற்கும் உன்பிரிவு
ஏகமாக வந்திடுவாய் வெகுவிரைவில்

மாதத்தில் மனம் கவர்ந்த மார்கழியே
மறவாமல் வந்திடுவாய்
மீண்டும் மீண்டுமாய்
அதிரை மெய்சா
குறிப்பு : இந்த கவிதை கடந்த [ 25-12-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. கீழே உள்ள காணொளியில் 49:40 வது நிமிடத்தில் வாசிக்கப்படுகிறது. 
நன்றி : மெய்சா காக்கா 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.