அமெரிக்காவில் பச்சிளம் குழந்தையை சாலையில் தீ வைத்த கொன்ற தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நியூஜெர்சி (New Jersey)மாநிலத்தில் உள்ள பெம்பர்டன் (Pemberton) பகுதியைச் சேர்ந்தவர் ஹைபர்ன்கெம்பர்லி டோர்விலியர்(Hyphernkemberly Dorvilier Age-22).
கடந்த 16ம் திகதி இரவு இவர் சாலையில் தனது பச்சிளம் பெண் குழந்தை மீது ஏதோ திரவத்தை ஊற்றி எரித்துள்ளார்.
இதை பார்த்த அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், தீயை அணைத்து உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தபோதும், சிகிச்சை பலனின்றி அக்குழந்தை பரிதாபமாய் உயிரிழந்துள்ளது.
இது தொடர்பாக டோர்விலியர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
No comments:
Post a Comment