சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல்அஸீஸ் இன்று மரணம் அடைந்தார்.
அவருக்கு வயது 90. கடந்த 3 வாரங்களாக நிமோனியா நோயினால் அவதிப்பட்டு வந்த மன்னர் அப்துல்லாஹ் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.
சவுதி அரேபியாவின் ஆறாவது மன்னராக அப்துல்லாஹ் ஆகஸ்ட்2005 அன்று பதவியேற்றார். சவுதி அரேபியாவில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்த இவர், கடும்போக்கு மதவாதிகளுக்கு எதிராக செயல்பட்டு வந்தார்.
சவுதி அரேபிய மன்னரின் மரணத்திற்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தங்களின் வழிகாட்டியை இழந்து நிற்கும் சவுதி அரேபிய மக்களின் நிலைக்கு வருந்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவருடைய மரணத்தினை அடுத்து தற்போது இளவரசராக உள்ள சல்மான் பின் அப்துல் அஸீஸ் புதிய மன்னராக பதவி ஏற்கிறார்.
நன்றி : இன்நேரம்.காம்
No comments:
Post a Comment