புது காலண்டர் வாங்கிய உடனே நாம் அதிகம் பார்ப்பது விடுமுறை தினங்களைத்தான். பண்டிகை நாட்களின் விடுமுறை தினங்கள் ஞாயிறு வரலையே என்பது தொடங்கி எந்த மாதம் அதிகம் விடுமுறை வருகிறது. எது ரொம்ப நல்ல மாதம் என்பது வரை கணக்கு போட்டு புரோகிராம் பிக்ஸ் பண்ணுவார்கள். உலகிலேயே அதிக அரசு பொது விடுமுறை தினங்களை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவே முதலிடம் வகிக்கிறதாம்.
ஓர் ஆண்டுக்கு 21 நாட்களை பொது விடுமுறை தினங்களாக கொண்டுள்ள இந்தியா திகழ்கிறதாம். இதில் உள்ளூர் விடுமுறை சேர்த்தியில்லை. பிரபல ஆன்லைன் டிராவல் வெப்ஸைட் வீகோ நடத்திய ஆய்வில், பிலிப்பைன்ஸ், சீனா, ஹாங் காங், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் நாடுகளை காட்டிலும் இந்தியா அதிக விடுமுறைகளை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியா நல்ல நாடு
இந்தியாவில் ஆண்டுக்கு 21 நாட்கள் அரசு பொதுவிடுமுறை விடப்படுகிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் 18 நாட்கள் விடுமுறை விடப்படுகின்றன.
சீனாகாரங்களுக்கு
இந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அடுத்த படியாக சீனா, ஹாங்காங் நாடுகளில் 17 நாட்களும், தாய்லாந்து நாட்டில் 16 நாட்களும் அரசு விடுமுறை தினங்களாக உள்ளது.
ஆசிய கண்டத்தில்
இந்த நாடுகளைத் தவிர ஆசியா கண்டத்தில் உள்ள மலேசியா, வியட்நாம் நாடுகளில் 15 நாட்களும், இந்தோனேசியாவில் 14 நாட்களுட் விடுமுறை விடப்படுகிறது. தைவான், தென்கொரியாவில் 13 நாட்களும், சிங்கப்பூரில் 11 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகின்றன.
பாவப்பட்ட மக்கள் யார்
இந்த நாடுகளைத் தவிர ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் 10 நாட்கள் மட்டும் பொது விடுமுறை அளிக்கின்றன. செர்பியா, ஜெர்மனியில் 9 நாட்களும், பிரிட்டன், ஸ்பெயின் நாட்டில் 8 நாட்களும் விடுமுறை அளிக்கப்படுகின்றன. ரொம்ப பாவப்பட்ட மக்கள் மெக்சிகோவாசிகள்தான் மொத்தம் 7 நாள்தான் விடுமுறை என்கிறது அந்த ஊர் காலண்டனர்.
No comments:
Post a Comment