நாங்கள் வறுமையில் இருக்கும்போது, மக்கள் வரிப்பணத்தில் பிரதமர் மோடிக்கு ரூ.10 லட்சத்தில் உடை தேவையா? எனக்கூறி விவசாயிகள் கோவணத்தோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (30ஆம் தேதி) விவசாயிகள் குறைத்தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகளில் சிலர் கோவனத்தோடும், தலையில் பட்டுத்துணியோடும் நூதனப்போராட்டம் நடத்தினார்கள்.
”விவசாய விலைப்பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கவில்லை. கடன் சுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உடுத்துவதற்கு கூட துணி இல்லாத அளவுக்கு நிலைமை மோசாகி கொண்டிருக்கிறது. ஆனால் மக்களின் வரிப்பணத்தை விரயமாக்கி ஆடம்பரமாக 10 லட்சம் ரூபாய்க்கு உடை அணிகிறார் பிரதமர் நரேந்திரமோடி. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் தற்கொலையை தடுத்து நிறுத்துவோம் என தேர்தல் பிரசாரத்தின் போது நரேந்திரமோடி வாக்குறுதி வழங்கினார். ஆனால், அதற்கான எந்த முயற்சியையுமே அவர் எடுக்கவில்லை. விவசாயிகளை வாழ வைக்க எந்த ஓர் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையுமே அவர் எடுக்கவில்லை.
தஞ்சாவூரில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை பல வகைகளிலும் வஞ்சகம் செய்ததால் சம்பந்தம் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் இருக்க, விவசாயிகள் விசயத்தில் மத்திய அரசு அதிக அக்கறையோடு நடந்துகொள்ள வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் கொடுக்க வேண்டிய நிலுவை தொகையை வட்டியோடு உடனடியாக ஆட்சியாளர்கள் பெற்று தர வேண்டும்” என்றார்கள் விவசாயிகள்.
முன்னதாக தற்கொலை செய்து இறந்த கரும்பு விவசாயி சம்பந்தத்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment